2010-01-20 15:58:42

நாளும் ஒரு நல்லெண்ணம். 21.01.2010


RealAudioMP3 பெண்மையைப் போற்றாத மதமா?
பெண்ணியம் பாராட்டாத இலக்கியமா?
எல்லாம் நன்றாய்த்தான் சொல்லுது.
யதார்த்தம்தான் எதிர் எதிராய் உள்ளது.
பெண்ணடிமையும், அது போக்கும் பெண் விடுதலையும்
சமத்துவ சுதந்திரத்திற்கான அறைகூவல்கள்
ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியின் ஆணிவேர்கள்.
விகிதம் கேட்பது வெறும் கருணை மனுவல்ல.
கண்திறக்க விடும் அறைகூவல்.
பெண்கள் முன்னேற்றம் இன்று ஆனந்தமே.
ஆனால், வீட்டுக்குள் வன்முறை தொடர்வது அவமானமே.
ஏன் தொடர்கின்றன?
என் பெண்டாட்டியைத்தானே அடித்தேன் என்பது ஆணாதிக்கம் என்றால்,
உன் புருஷன்தானே அடித்தான் என்று ஏற்பது பெண்ணடிமைத்தனமில்லையா?
பழங்கலாச்சாரமாய், இலக்கியமாய், வேர்விட்டு வளர்ந்துவிட்ட
இச்சமூகக் கொடுமையை அடிவேராய் கருவறுப்பதற்குக் காலமாகலாம்.
அது காலமாகும் காலமும் கைகூடலாம்.
மாற்றம் விரைவில் ஏற்படாது என்பது தோல்விக் கணையல்ல.
அது ஏற்படும்போது, ஏற்றுக்கொள்ள நாம் தயாராக உள்ளோமா என்பதே கேள்விக்கணை.







All the contents on this site are copyrighted ©.