2010-01-20 15:44:20

இயேசுசபை அகதிகள் சேவை, CRS எனப்படும் கத்தோலிக்க துயர் துடைக்கும் சேவை ஆகிய அமைப்புகள் ஹெயிட்டிக்கு உதவி


சன.20,2010 கடந்த இருநூறு ஆண்டுகளில் மிகப்பெரும் நிலநடுக்கத்தைச் சந்தித்துள்ள ஹெயிட்டிக்கு உதவும் வகையில் இயேசுசபை அகதிகள் சேவை, CRS எனப்படும் கத்தோலிக்க துயர் துடைக்கும் சேவை ஆகிய அமைப்புகள் இதுவரை பல லட்சம் டாலர்கள் பெறுமான மருத்துவ உதவிகளும், மக்கள் தங்கும் இடங்களுக்கான உதவிகளும் செய்து வருகின்றன. Port au Princeலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் இயேசு சபையினர் நடத்தி வரும் மருத்துவமனைகளில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒமஹாவில் உள்ள Creighton, சிகாகோவில் உள்ள Loyola ஆகிய யேசுசபையைச் சார்ந்த பல்கலைகழகங்களிளிருந்து சென்றுள்ள பல மருத்துவர்கள் இரவும் பகலும் பணி புரிந்து வருகின்றனர் என்று செய்திக் குறிப்புகள் கூறுகின்றன. மேலும், CRS எனப்படும் கத்தோலிக்க துயர்துடைக்கும் சேவை வழங்கிய மருத்துவ உபகரணங்கள், மருந்து, இவைகளைத் தாங்கிய விமானம் ஒன்று இச்செவ்வாயன்று ஹெயிட்டியை அடைந்தது என்றும் அதில் பல மருத்துவர்களும் உடன் சென்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த       நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல ஆயிரம் மக்கள் அண்மைய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லக்கூடிய நிலை உருவாகலாம் எனவும், அந்த நிலையைக் குறைப்பதற்காக, மக்களை முடிந்தவரை ஹெயிட்டியிலேயே மீண்டும் குடியமர்த்த முயன்று வருவதாகவும் இயேசுசபை அகதிகள் பணியின் சமூகத் தொடர்பு இயக்குனர் கிறிஸ்டியன் புக்ஸ் (Christian Fuchs) செய்தியாளர்களிடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.