2010-01-19 16:40:58

கீழை ரீதி கத்தோலிக்க குருக்களுக்கான நல ஆதரவு திட்டங்கள், முதிய குருக்களுக்கான உதவிகள் 


சன.19,2010. 1989ம் வருட கம்யூனிச வீழ்ச்சிக்குப் பின் கீழை ரீதி கத்தோலிக்க சபையில் குருக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக திருப்பீடத்தின் கீழை ரீதி சபைகளுக்கான பேராயம் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் கீழை ரீதி குருக்களுக்கான உதவி குறித்து இரு நாள் கூட்டத்தை வத்திக்கானில் நடத்தி வரும் இப்பேராயம், முன்னாள் கம்யூனிச நாடுகளில் கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய அமைப்பு முறை, பொருளாதார ரீதியாக சுயமாக நிற்க முடியாதிருப்பதால், மேற்கத்திய நாடுகளை சார்ந்து இருப்பதாக தெரிவித்தது.
குருக்களுக்கான நல ஆதரவு திட்டங்கள், முதிய குருக்களுக்கான உதவிகள் போன்றவைகள் குறித்து விவாதித்து வரும் இக்கூட்டம், வருங்காலத் திட்டங்களை வடிவமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Eritrea, Ethiopia மற்றும் ஈராக்கின் கீழை ரீதி சபைகள் குறித்தும் விவாதங்கள் இடம்பெற உள்ள இக்கூட்டத்தில், மேற்கத்திய நாடுகளின் ஏறத்தாழ 20 கத்தோலிக்க உதவி அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கு பெறுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.