2010-01-19 16:39:43

கம்யூனிச தலைவர் ஜோதி பாசுவின்  மறைவு குறித்து இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது இந்தியா ஆயர் பேரவை


சன.19,2010 மேற்கு வங்கத்தின் மறைந்த கம்யூனிச தலைவர் ஜோதிபாசு, எளிமையான வாழ்வு நடத்தி தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல், கறை படியா ஓர் அரசியல் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்தவர் என தன் இரங்கல் செய்தியில் பாராட்டை வெளியிட்டுள்ளது இந்திய தலத்திருச்சபை.
கம்யூனிச தலைவரின் மறைவு குறித்து இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ள இந்திய ஆயர் பேரவை, இந்தியாவின் நிலமற்றோருக்கும், ஏழைகளுக்கும் நீதி கிட்ட வேண்டும் என அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இந்திய வரலாற்றில் என்றென்றும் நினைவு கூறப்படும் என அதில் தெரிவித்துள்ளது.
தலைவர் ஜோதிபாசுவின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, அவரின் எதிரிகள் கூட, அவரின் அரசியல் ஆலோசனைகளுக்குச் செவிமடுத்தனர் எனவும், இந்திய ஆயர்கள் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த 33 ஆண்டுகளாக தலைவர் ஜோதிபாசுவின் நேரடி உதவியாளராக இருந்த Joy Krishno Ghoshன் கூற்றுப்படி, ஜோதிபாசு முதல்வர் பதவியிலிருந்த போது, அன்னை தெரசா எப்போது வந்து சந்திக்க விரும்பினாலும், அவருக்குக் கால தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு போட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.