2010-01-19 16:41:22

El Salvador  நாட்டின் உள்நாட்டுப் போரின் போது நிகழ்த்தப்பட்ட வன்முறைக் குற்றங்களுக்காக அரசு மன்னிப்பை வேண்டியுள்ளது வரவேற்கப்பட வேண்டியது - கத்தோலிக்கத் திருச்சபை


சன.19,2010. El Salvador நாட்டின் உள்நாட்டுப் போரின் போது நிகழ்த்தப்பட்ட வன்முறைக் குற்றங்களுக்காக அந்நாட்டு அரசு மன்னிப்பை வேண்டியுள்ளது வரவேற்கப்பட வேண்டியது என அறிவித்துள்ளது கத்தோலிக்கத் திருச்சபை.
உள்நாட்டுப் போரின் போதான உரிமை மீறல் நடவடிக்கைகளுக்காக அரசு மன்னிப்பை வேண்டுவதாக அரசுத்தலைவர் Mauricio Funes உரைத்துள்ளது ஒரு முக்கியமான முன்னேற்றப்படி என்றார், El Salvador க்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Luigi Pezzuto.
உள்நாட்டுப் போர் முடிவடைந்து 18 ஆண்டுகளுக்குப் பின் இடம் பெற்றுள்ள இம்மன்னிப்புக் கோரல், நாட்டில் ஒப்புரவின் அவசியத்தை உணர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது என்றார் பேராயர். அரசின் இந்த முன்மாதிரிகையைப் பின்பற்றி, தனியார்களும் உள்நாட்டுப் போரின் போது தாங்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பை வேண்டி, ஒப்புரவிற்கு உதவ முன்வர வேண்டும் என்ற அழைப்பையும் பேராயர் Pezzuto முன்வைத்தார்.







All the contents on this site are copyrighted ©.