2010-01-18 14:59:02

ஹெயிட்டியின் மக்களுக்கென மூன்று லட்சம் பிரித்தானிய பவுண்ட்களை வழங்க உள்ளதாக CAFOD அறிவித்துள்ளது


சன.18,2010 இதற்கிடையே, ஹெயிட்டியின் அண்மைய நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென உடனடியாக மூன்று லட்சம் பிரித்தானிய பவுண்ட்களை, அதாவது, ஏறத்தாழ இரண்டு கோடியே, இருபத்தி மூன்றரை லட்சம் ரூபாய்களை வழங்க உள்ளதாக பிரிட்டனின் கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பான CAFOD அறிவித்துள்ளது.
50 ஆயிரம் முதல், ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்ற வேளையில், 3 லட்சம் பேர் வரை வீடுகளை இழந்துள்ளனர், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, லத்தீன் அமெரிக்க காரித்தாஸ் அமைப்பின் குழு, பாதிக்கப்பட்ட மக்களிடையே உணவு, போர்வைகள், கூடார விரிப்புகள், முதலுதவி மருந்துகள் போன்றவைகளை வழங்கத் துவங்கியுள்ளது.
இந்தியா காரித்தாஸ் அமைப்பும் ஹெயிட்டி நாட்டிற்கு உதவிகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அதன் உயர் இயக்குனர் குரு வர்கீஸ் மட்டமானா தெரிவித்தார். இந்தியா அரசும் ஹெயிட்டிக்கான உடனடி நிவாரண உதவியாக 10 லட்சம் டாலர்களுக்கு உறுதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.