2010-01-18 15:18:50

நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3
சன.19,2010 ஒரு முதியவரும் ஓர் இளைஞனும் வழியில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் சென்ற பாதையில் ஒரு பணமூட்டை கிடந்தது. அதை இளைஞன் குனிந்து எடுத்தான். அப்போது முதியவர், “கடவுள் இதனை எனக்காக அனுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். நாம் இதைப் பகிர்ந்து கொள்வோம்” என்றார். ஆனால் இளைஞன், “இல்லை இல்லை, நாம் இருவரும் சேர்ந்து இதனைக் கண்டுபிடிக்கவில்லை. நான்தான் அதை எடுத்தேன்” என்றான். பெரியவர் பதில் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தனர். திடீரென்று குதிரைகள் வெகுவேகமாக நான்குகால் பாய்ச்சலில் பின்தொடர்ந்து வருவதையும் பணப்பையைத் திருடியது யார் என்று ஆள்கள் கத்துவதையும் கேட்டனர். அப்போது இளைஞன் பயந்து, முதியவரிடம், “மாமா, நாம் கண்டெடுத்த பணமூட்டைக்காக அரசன் இதை அறிந்து துன்பத்தைத் தருவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்றான். அதற்கு முதியவர், “அது உன்னுடையது. நம்முடையதன்று. உனக்குத்தான் உன்னுடைய துன்பம். நம்முடையதன்று” என்றார். குதிரையில் வந்த அந்த நால்வரும் அந்த இளைஞனைப் பிடித்து சோதனை செய்வதற்காக நகரத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். ஆனால் முதியவரோ அமைதியாக வீடு நோக்கி நடந்தார்.ஆம். பெரியோர் சொல் கேட்பது நன்று. அதன்படி நடப்பதும் நன்று. நன்மைத்தனம் நிறைந்திருக்கும் பொழுது அங்கு தீமைக்கு இடமில்லை







All the contents on this site are copyrighted ©.