2010-01-16 13:20:47

சனவரி 17 - நாளும் ஒரு நல்லெண்ணம் 


RealAudioMP3
சனவரி 17 - அமெரிக்க ஐக்கிய நாட்டினை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Fanklin) பிறந்த நாள். இவர் எழுதிய சுய சரிதையில் தான் பின்பற்ற வேண்டுமென உணர்ந்த 13 புண்ணியங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவைகளில் ஒரு சில இதோ:
மௌனம் காத்தல்: உனக்கும் பிறருக்கும் பயனுள்ளதையே பேசு. தேவையற்றவகளைப் பேசாதே.
அளவோடு உண்ணுதல்: உடலும் மனமும் மந்தமாகும் வரை உண்ணாதே. அதிகம் குடிக்காதே.
அளவோடு செலவு செய்தல்: உனக்கும், பிறருக்கும் நல்லவைகள் விளைவதற்குச் செலவு செய். எதையும் வீணாக்காதே.இதேபோல் சாந்தமாயிருத்தல், பணிவாயிருத்தல், நேர்மையாயிருத்தல்... என்று தான் பின்பற்ற வேண்டிய 13 புண்ணியங்களையும் குறிப்பிடும் பிராங்க்ளின், எல்லா புண்ணியங்களையும் எல்லா நேரங்களிலும் பின்பற்றுவதை விட, வாரத்திற்கு ஒரு புண்ணியத்தை மையப்படுத்தி வாழ முற்பட்டதாக எழுதியிருக்கிறார். தான் இந்தப் புண்ணியங்களைப் பின்பற்றுவதில் பல முறை தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டும் பிராங்க்ளின், வரும் சந்ததியினர் இந்த புண்ணியங்களிலிருந்து பயனடைந்தால் நல்லது என்று தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.