2010-01-16 13:19:18

குடியேற்றதாரர்களின் நலனில் அக்கறை காட்ட உதவும் திட்டங்கள் - வியட்நாம் தலத்திருச்சபை முயற்சி


சன.16,2010 வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் வாழும் வியட்நாம் குடியேற்றதாரர்களின் நலனில் அக்கறை காட்டுவதற்கு உதவும் தேசிய அளவிலான மேய்ப்புப்பணி திட்டங்களை வகுப்பதற்கு வியட்நாம் தலத்திருச்சபை முயற்சித்து வருகிறது.
வியட்நாமின் 26 மறைமாவட்டங்களும் இணைந்து நடத்திய கூட்டத்தில் பேசிய அந்நாட்டு Ho Chi Minh உயர் மறைமாவட்ட  கர்தினால் Jean Baptiste Pham Minh Man, ஒவ்வொரு மறைமாவட்டமும் அதனைச் சேர்ந்த குடியேற்றதாரருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றார்.
வியட்நாம் திருச்சபையின் குடியேற்றதாரர் ஆணையத்தின் கணிப்புப்படி, ஏறத்தாழ 80 இலட்சம் பேர் உள்ளூரிலும் 40 இலட்சம் பேர் வெளிநாடுகளிலும் குடியேற்றதார பணியாளர்கள் உள்ளனர்.திருச்சபையில் இஞ்ஞாயிறன்று 96வது உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.