2010-01-15 15:30:50

இமயமலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணம்-விளக்குகிறது புதிய ஆய்வு


சன.15,2010 இந்தியப் பகுதியில் பூமிக்கடியில் இருக்கும் நிலத்தகடுகள் நகர்ந்து ஏற்படும் உராய்வால் உண்டாகும் அழுத்தம் காரணமாகவே இமயமலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இமயமலைப் பகுதியில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எதிர்காலத்தில் இமயமலை பலவீனம் அடைந்து நொறுங்கும் அபாயமும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன், இந்திய நிலத்தகடுகள் மற்றும் யுரேஷியன் நிலத்தகடுகள் இடையே மோதல் நிகழ்ந்துள்ளது. பொதுவாக, இருபகுதி நிலத்தகடுகள் மோதினால், அத்துடன் அவற்றின் உராய்வு நின்றுவிடும். ஆனால், இந்தியா மற்றும் யுரேஷியன் நிலத்தகடு மோதல் சம்பவத்தில் அது நிகழ வில்லை. இரண்டு நிலத்தகடுகளும் ஒன்றுக்கொன்று உராயத் துவங்கியது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.