2010-01-14 14:45:58

நாளும் ஒரு நல்லெண்ணம்


சன.15,2010 RealAudioMP3 பூமிதான இயக்கம் நடந்து கொண்டிருந்த போது வினோபா, அதிகாலை யாத்திரைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மக்கள் அடிக்கடி அவரோடு செல்வது வழக்கம். அத்துடன் பலர் பலவிதமான கேள்விகளையும் அவரிடம் கேட்பது வழக்கம். அப்படி ஒருநாள் அன்பர் ஒருவர் வினோபாவிடம், “ஐயா, நான் நல்ல முறையில் அச்சடிக்க விரும்புகிறேன். அதற்கு ஏதாவது வழிமுறை கூறுங்கள்” என்று கேட்டார். அதற்கு அவர், “நார் நிறைந்த காய்கறிகளைச் சாப்பிடுங்கள். பசும்பால் குடியுங்கள்” என்று பதில் சொன்னார். இந்தப் பதில் கேள்வி கேட்டவருக்குப் புரியவில்லை. ஆதலால் அவர், வினோபாவிடம், “ஐயா, தாங்கள் எனது கேள்வியைச் சரியாகக் காதில் வாங்கவில்லையோ” என்று கேட்டார். “நான் உங்கள் கேள்வியைச் சரியாகப் புரிந்து கொண்டுதான் பதில் கூறினேன். நார் நிறைந்த காய்கறிகளைச் சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும். வயிறு தூய்மையாக இருந்தால் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அது நன்றாகத்தான் இருக்கும்” என்றார் வினோபா.

இச்சனிக்கிழமை உழவர் தினம். அன்பர்களே, இந்தப் பொங்கல்விழாக் காலத்தில் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் வாழ்வு மலர உதவுவோம்








All the contents on this site are copyrighted ©.