2010-01-13 14:55:16

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி மக்களுக்கு உதவ திருத்தந்தை அழைப்பு


சன.13,2009 இந்நாட்களில் இத்தாலி உட்பட மேலை நாடுகளில் கடுங்குளிரும் கடும் பனிப் பொழிவும் இடம் பெற்று பல இடங்களில் மக்களின் தினசரி வாழ்க்கைநிலை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்நிலையில் இச்செவ்வாய் மாலை ஹெய்ட்டி நாட்டில் ஏற்பட்ட கடும் பூமிஅதிர்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய சேதங்களும் ஏற்பட்டுள்ளன. திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இப்புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளிடம், கரீபியன் தீவு நாடான ஹெய்ட்டி நாட்டில் துன்புறும் மக்களை நினைவு கூர்ந்தார். இந்த இயற்கைப் பேரிடரில் இறந்தவர்களின் ஆன்மா நிறைசாந்தியடையவும், இவர்களை இழந்து கண்ணீருடன் தவிக்கும் உறவுகளுடனான தமது ஆன்மீகரீதியான ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார். இந்த மக்களுக்கான சர்வதேச அளவிலான தோழமைச் செயல்களுக்கும் அழைப்பு விடுத்தார். கத்தோலிக்கத் திருச்சபையும் தனது காரித்தாஸ் பிறரன்பு நிறுவனங்கள் வழியாக உடனடியாக உதவிகளைச் செய்வதில் தவறாமல் ஈடுபடுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார் RealAudioMP3 . மேற்கத்திய உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் 95 விழுக்காட்டினர் கறுப்பினத்தவர் மற்றும் 80 விழுக்காட்டினர் உரோமன் கத்தோலிக்கர்







All the contents on this site are copyrighted ©.