2010-01-13 15:05:46

புனித அல்போன்சாவின் திருப்பண்டம் கேரளாவைத் தவிர அகமதாபாதில் முதன்முறையாக நிறுவப்பட்டது


சன.13,2010 புனித அல்போன்சாவின் திருப்பண்டம் குஜராத், அகமதாபாதில் உள்ள புனித லயோலா இஞ்ஞாசியார் கோவிலில் அண்மையில் நிறுவப்பட்டது. 2008ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்டால் புனிதையாக உயர்த்தப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி புனித அல்போன்சாவின் திருப்பண்டம் கேரளாவைத் தவிர வேறு ஒரு இடத்தில் நிறுவப்படுவது இதுவே முதன்முறையாகும் என்று அகமதாபாத் ஆயர் தாமஸ் மெக்வான் (Thomas Macwan)  கூறினார். ஆயர் மெக்வான் இந்தப் புனித பண்டத்தை ஒரு ஊர்வலத்தில் ஏந்திச் சென்று, பின்னர் இஞ்ஞாசியார் கோவிலில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலிக்குப் பின் இந்த புனித பண்டத்தை புனித அல்போன்சாவுக்கென்று உருவாக்கப்பட்ட ஒரு பீடத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தார். ஏறக்குறைய 3000 பக்தர்கள் இந்த திருப்பலியில் கலந்து கொண்டனர் என்றும் காந்திநகர், பரோடா ஆகிய அண்மை மறைமாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்றும் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.