2010-01-13 15:05:57

இயற்கையை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில்  உறுதி எடுத்துள்ளனர் தென் ஆசியாவின் கிறிஸ்தவ இளையோர்


சன.13,2010 இயற்கையை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனிப்பட்டமுறையில் கவனம் செலுத்துவதாகவும், இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பரப்புவதாகவும் உறுதி எடுத்துள்ளனர் தென் ஆசியாவின் கிறிஸ்தவ இளையோர்.
அண்மையில் கொல்கத்தாவில் ஐந்து நாட்களாய் நடைபெற்ற அகில இந்திய கிறிஸ்துவ ஐக்கிய இளையோர் கருத்தரங்கில் கலந்து கொண்ட700க்கும் மேற்பட்ட இளையோர் இந்த கருத்தரங்கின் முடிவில் இந்த உறுதி எடுத்துள்ளனர். பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த இளையோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, கடவுள், இயற்கை, மனித சமுதாயம் குறித்த பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இளையோர் இயற்கையைப் பொறுத்தமட்டில் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், நாளைய உலகம் நல்லவிதமாக அமையும் என்று இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட வட இந்திய சபையின் கொல்கத்தா ஆயர் அசோக் பிஸ்வாஸ் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.