2010-01-13 15:05:34

CAFOD மேற்கொண்ட போராட்டங்களின் பயனாக சுரங்கத் தொழில் நிறுவனம் தன் வேலைகளை நிறுத்திக்கொண்டது


சன.13,2010 ஆங்கில ஆஸ்திரேலிய கூட்டு முயற்சியில் உருவான சுரங்கத் தொழில் நிறுவனமான BHP Billiton பிலிப்பின்சில் இதுவரை செய்துவந்த பித்தளை (Nickel) சுரங்கப் பணியை அண்மையில் நிறுத்திக்கொண்டது. CAFOD என்ற கத்தோலிக்க சமுதாய முன்னேற்ற அமைப்பு பிலிப்பின்சில் நடைபெறும் அளவுக்கதிகமான சுரங்கத் தொழிலுக்கு எதிராக 2008ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட போராட்டங்களின் பயனாக இது நடந்துள்ளதென செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. அளவுக்கதிகமான சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்கள் இந்தத் தொழிலால் ஏற்படும் மண் சரிவு, வெள்ளம், சுற்றுச்சூழல் மாசு போன்ற தீமையான பின் விளைவுகளை மக்களிடமிருந்து மறைத்து செயல்படுவதை எதிர்த்தே இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன என்று CAFOD உயர் அதிகாரி Sonya Maldar கூறியுள்ளார். இந்த போராட்டங்களின் ஒரு முயற்சியாக பல்லாயிரம் கடிதங்களும் email செய்திகளும் BHP பில்லிட்டன்  நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதால், இந்த நிறுவனம் தன் வேலைகளை நிறுத்திக்கொண்டதென ஊடகத் துறை செய்தி ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.