2010-01-11 14:35:56

திருமுழுக்கு திருவருட்சாதனத்தின் மூலம் விசுவாசிகள் கடவுளின் பிள்ளைகளாகவும் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாகவும் ஆகுகிறார்கள் - திருத்தந்தை


சன.11,2010 : திருமுழுக்கு திருவருட்சாதனத்தின் மூலம் விசுவாசிகள் கடவுளின் பிள்ளைகளாகவும் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாகவும் ஆகுகிறார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார்.

திருமுழுக்கு வழியாகப் புதிய வாழ்வுக்குப் பிறந்த கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் வளரும் பயணத்தைத் தொடங்குகிறார்கள், அது கடவுளை, அப்பா தந்தையே என முழுஉணர்வுடன் அழைப்பதற்கு வழி செய்கிறது என்றார் அவர்.

சகோதரத்துவத்தைக், கருத்துக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்க முடியாது, நீதி மற்றும் அதிகார ஆணையின்படியும் ஏற்படுத்த முடியாது, மாறாக நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்ற ஆழமான உணர்வின் மூலமாக நாம் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் என்பதை ஏற்கிறோம் எனவும் திருத்தந்தை கூறினார்.

திருமுழுக்கில் தூய ஆவியின் கொடையைப் பெற்றதற்கு நன்றி கூறும் கிறிஸ்தவர்கள், கடவுளின் பிள்ளைகளாக வாழும் கடமையையும் கொண்டுள்ளோம் என்றும் திருத்தந்தை மூவேளை செப உரையில் கூறினார்







All the contents on this site are copyrighted ©.