2010-01-08 15:27:54

வருங்காலத்தில் தண்ணீர் சம்பந்தமாக மோதல்கள் வெடிக்கக் கூடும்-அமெரிக்க ஐக்கிய நாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது


சன.08,2010 உலக மக்கள் தொகை அதிகரிப்பு, குடிநீர் வளங்கள் குறைந்து வருவது போன்றவை காரணமாக, வருங்காலத்தில் தண்ணீர் சம்பந்தமாக மோதல்கள் வெடிக்கக் கூடும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு கருத்தரங்கில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆயர்களின் சி ஆர் எஸ் பிறரன்பு நிறுவனமும் Woodrow Wilson International Center for Scholars என்ற மையமும் இணைந்து, “தண்ணீரும் மோதல்களும்” என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் இவ்வாறு கூறப்பட்டது. எனினும் இப்பிரச்சனையை அமைதியான வழியில் தீர்ப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவும் அதில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

சுத்தமான குடிநீரைக் கொண்டிருப்பதற்கான உரிமையும் மனித உரிமையே என்று உரைத்த அவர்கள், உலகில் ஏறத்தாழ 100 கோடிப் பேருக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லை, 200கோடிக்கு மேற்பட்டோருக்கு நலவாழ்வு வசதி இல்லை, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்புடைய நோய்களால் ஆண்டுதோறும் 20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறக்கின்றனர், இவர்களில் பெரும்பாலானோர் சிறார் என்றும் தெரிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.