2010-01-08 15:25:57

மலேசியாவில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டது குறித்து பிரதமர், எதிர்க்கட்சி, கண்டனங்கள்


சன.08,2010 மலேசியாவின் கோலாலம்பூரில் இவ்வெள்ளி அதிகாலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டது குறித்து அந்நாட்டுப் பிரதமரும், எதிர்க்கட்சியான PAS என்ற Pan மலேசிய இசுலாமிய கட்சியும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து நிருபர்களிடம் பேசிய பிரதமர் Najib Abdul Razak, அனைத்து ஆலயங்களுக்கும் பாதுகாப்பு போடுவதற்குக் காவல்துறைக்கு ஆணையிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் Salahuddin Ayub, எந்தவொரு சமயத்தின் வழிபாட்டுத்தலத்தைத் தாக்குவது இசுலாமில் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

கோலாலம்பூருக்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள Petaling Jaya கத்தோலிக்க ஆலயம் மற்றும் இரண்டு பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயங்களும் இவ்வெள்ளி அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் குண்டுகள் வீசி தாக்கப்பட்டுள்ளன. எனினும் ஆள்சேதம் எதுவும் இல்லை.

மலேசியாவில் முஸ்லீம் அல்லாதவர்களும், கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அந்நாட்டில் பதட்டநிலைகள் உருவாகியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.