2010-01-08 15:24:15

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், மக்கள், தங்கள் மனச்சாடசியின் அடிப்படையில் வாக்களிக்குமாறு கொழும்பு பேராயர் அழைப்பு


சன.08,2010 இலங்கையில் இம்மாதம் 26ம் தேதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில், மக்கள், நீதி, சமத்துவம், ஜனநாயகம் ஆகிய கொள்கைகளால் தூண்டப்பட்டு தங்கள் மனச்சாடசியின் அடிப்படையில் வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித்.

முப்பது வருட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் இடம் பெறவிருக்கும் இந்தத் தேர்தல், இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியமானது என்று உரைத்த பேராயர் ரஞ்சித், தேர்தலுக்கு முன்னும் பின்னும் அமைதியான சூழல் உருவாக கத்தோலிக்கர் உதவுமாறும் அதற்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார்.

கத்தோலிக்கர், தங்களது சிந்தனையையும் சமுதாயப் பொறுப்புக்களையும் வழிநடத்தும்

விசுவாசக் கோட்பாடுகளைக் கருத்தில் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம், இத்தேர்தலில் போட்டியிடும் 22 வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறவும், வாக்காளர்கள் சுதந்திரமாகச் செயல்படவும் உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார் கொழும்பு பேராயர் ரஞ்சித்.








All the contents on this site are copyrighted ©.