2010-01-07 13:19:37

நாளொரு நல்லெண்ணம்


சன.07,2010 RealAudioMP3 2006ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலண்டனிலுள்ள செஸ்டர் மிருகக்காட்சி சாலையில் ஓர் அதிசயம் நடந்தது. ப்ளோரா எனப் பெயரிடப்பட்ட பறக்கும் தன்மையுடைய முதலை கருவுற்று முட்டையிட்டது. அந்த முட்டைகள் அடைகாக்கப்பட்டு கிறிஸ்து பிறப்பு காலத்தில் குட்டிகள் வெளிவந்தன. ஆனால் அந்தக் குட்டிகள் அந்த முதலை இனத்தைச் சார்ந்தவையாக இல்லாமல், ட்ராகென்களாக இருந்தன. இதில் அதிசயம் என்னவென்றால் ஆண் கொமொடோ ட்ராகன் ஐரோப்பாவில் எங்குமே கிடையாதாம். அந்த செஸ்டர் மிருகக்காட்சி சாலையிலும் கிடையாது. அறிவியல் உலகத்துக்குப் புதிராக அமைந்த இந்நிகழ்ச்சி டெலிகிராப்பில் 2006ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி வெளியானது. அதிசயங்கள் நிகழ முடியுமா, முடியும் என்பதற்கு இது ஒரு சான்று. நண்பா, உன்னால் முடியாது என்று சொல்வோர் பலர் உண்டு. உன்னால் முடியும் என்று தூண்டுபவர் இருந்தால் நீயும் பொன்னான வரலாறு படைப்பாய், அதிசயங்களைக் காண்பாய்







All the contents on this site are copyrighted ©.