2010-01-07 14:48:10

துருக்கியின் புதிய தூதுவரைச் சந்தித்தார் திருத்தந்தை


சன.07,2010 திருப்பீடத்திற்கும், துருக்கி நாட்டிற்கும் இடையே அரசியல் உறவு துவக்கப்பட்டபின்னான கடந்த 50 ஆண்டுகளில், இருதரப்பினரும் பல்வேறு வழிகளில் நல்ல பலன்களைக் கண்டுள்ளதாகக் கூறினார் பாப்பிறை 16ம் பெனெடிக்ட்.
வத்திக்கானுக்கான துருக்கியின் புதிய தூதுவர் Kenan Gursoyயிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, 2006ஆம் ஆண்டு அந்நாட்டில் தான் மேற்கொண்ட திருப்பயணத்தை நினைவு கூர்ந்ததுடன், சிறுபான்மையினராக வாழும் அந்நாட்டு கிறிஸ்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கெனவும், ஐரோப்பிய நாகரீக மேம்பாட்டிற்கெனவும் ஆற்றியுள்ள பங்கையும் சுட்டிக்காட்டினார்.
துருக்கி நாட்டின் பெரும்பான்மை இஸ்லாமிய சமுதாயத்தைச் சந்தித்து உரையாட தனக்குக் கிடைத்த வாய்ப்பு குறித்து இறைவனுக்கு நன்றி கூறுவதாகவும், இருமதங்களுக் கிடையேயான இந்நல்லுறவு தொடரவேண்டும் என ஆவல் கொள்வதாகவும் புதிய தூதரிடம் கூறினார் பாப்பிறை.மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியைக் கொணர துருக்கிக்கு இருக்கும் வாய்ப்புகளையும் எடுத்தியம்பினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.