2010-01-05 15:31:24

ஏமனில் 18 இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் வாழ்கின்றனர்


சன.05,2009 ஏமன்நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்ற போதிலும் அந்நாட்டில் 18 இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் வாழ்கின்றனர் என்று அந்நாட்டு குடியேற்றதாரர் அலுவலகம் அறிவித்தது.

2009ம் ஆண்டின் புள்ளி விபரங்களின்படி ஏமனில் வாழும் அகதிகளுள் பெரும்பாலானோர் சொமாலியா, எத்தியோப்பியா, எரிட்ரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும், ஏமனில் அல்கெய்தா அமைப்பினரின் இருப்பு குறித்து கவலை தெரிவித்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், இவ்விவகாரம் குறித்து இலண்டன் பிரதமரின் முயற்சியில் அங்கு நடைபெறவிருக்கும் கருத்தரங்கிற்குத் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

ஏமன் இராணுவத்திற்கும் புரட்சிப் படைகளுக்கும் இடையே கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் மோதல்களில் 1,75,000க்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த கவலையையும் பான் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.