உலகிலேயே மிக உயரமானக் கட்டிடம் துபாயில் திறக்கப்பட்டுள்ளது
சன.05,2009 உலகிலேயே மிக உயரமானக் கட்டிடம் என்று கூறப்படுகின்ற புர்ஜ் துபாய் என்ற புதிய
கட்டிடம் இத்திங்களன்று திறக்கப்பட்டுள்ளது.
எண்ணூறு மீட்டர்களுக்கும் அதிகமான
உயரத்துடன், வெளிப்பறத்தில் ஏறத்தாழ 28 ஆயிரம் கண்ணாடி சன்னல், கதவுகள் கொண்ட இக்கட்டிடத்தை
95 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பார்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
நூற்று
அறுபது மாடிகளைக் கொண்டதாக அமைந்திருக்கும் இக்கட்டிடத்தில் 1044 பகுதிகள் உள்ளன, இவற்றில்
90 விழுக்காட்டுப் பகுதி ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது
இக்கட்டிடம்,
துபாய் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துவந்த சமயத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எமிரேட்டுகளின் வெற்றிச் சின்னமாக இக்கட்டிடம் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில்
இது கட்ட ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
ஆனால் ஒரு பொருளாதார நெருக்கடியில்
சிக்கி, செல்வச் செழிப்பு மிக்க தனது அண்டை ஊரான அபுதாபியிடமிருந்து ஆயிரம் கோடி டாலர்
கடன் வாங்கி தனது நெருக்கடியை மீட்கப்படவேண்டிய நிலைக்கு துபாய் தள்ளப்பட்டுள்ள ஒரு தருணத்ததில்
இக்கட்டிடம் திறக்கப்படுகிறது என்றும் ஊடகங்கள் விமர்சித்துள்ளன
உலகிலுள்ள ஐந்து
உயரமான கட்டிடங்களில் நான்கு ஆசியாவில் உள்ளன என்றும், தாய்வானின் தாய்பேய் 101 என்ற
கட்டிடம், 508 மீட்டர் உயரத்தையும், ஹாங்காங்கிலுள்ள TwoIFC என்ற கட்டிடம் 420 மீட்டர்
உயரத்தையும் கொண்டுள்ளன