2010-01-05 15:33:43

இந்தியா 20 புதிய செயற்கைக்கோள்களைத் தயாரித்து வருவதாக இஸ்ரோ தலைவர் அறிவிப்பு


சன.05,2009 இந்தியா 20 புதிய செயற்கைக்கோள்களைத் தயாரித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் 97வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்றிய ராதாகிருஷ்ணன், இதுவரை இந்தியா 57 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. 20 புதிய செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று அறிவித்தார்.

இதில் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி யு.ஆர். ராவ், இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலம்தான் நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்து உலகுக்கு முதலில் அறிவித்தது, அடுத்த 50 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் என்றும் கூறினார்.

இதில் உரையாற்றிய மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் வி. பிரகாஷ், உலகம் வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு காரணமாக வளரும் நாடுகளில் கடந்த 8 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 3 முதல் 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. உலகில் பலகோடி பேருக்கு ஒருவேளை மட்டுமே உணவு கிடைக்கிறது என்றார்.








All the contents on this site are copyrighted ©.