2010-01-04 15:59:26

43வது உலக அமைதி தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி


சன.04,2010 புதிய ஆண்டு பிறந்து வேகமாக நடைபோடத் துவங்கிவிட்டது. இவ்வேளையில் உலகின் நிலவரத்தை அலசும் பொழுது, நெஞ்சுக்கு இனிமையான மற்றும் கசப்பான செய்திகள் நடந்து வருகின்றன. இலங்கையின் திருகோணமலை பகுதியில் கடந்த நான்கு வருடங்களுக்குப் பின்னர் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் சென்று சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது இனிப்பு செய்தி. சீனாவின் பெய்ஜிங்கில் கடந்த 60 வருடங்களில் முதன் முறையாக கடும் பனிப்பொழிவை மக்கள் எதிர்நோக்குகின்றனர். சுமார் 30 செ.மீ அளவு பனிப்பொழிவினால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளைத் துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வடஇந்தியாவில் வீசும் கடும் குளிர் காற்றினால் பலர் இறந்துள்ளனர். இது இவ்வாறிருக்க பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லாமல் இல்லை. அந்நிய சக்திகளின் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல் காரணமாக ஏமனில் இருக்கின்ற தூதரகத்தை அமெரிக்காவும், பிரிட்டனும் மூடியுள்ளன. பாகிஸ்தானில் சாலையோரக் குண்டு வெடிப்பு காரணமாக இத்திங்களன்றுகூட சிலர் இறந்துள்ளனர். இந்நிலையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உலகில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். 2010ம் ஆண்டு சனவரி முதல் நாள் திருச்சபை 43ம் உலக அமைதி தினத்தைச் சிறப்பித்தது. இதற்கென திருத்தந்தை உலகினருக்கு வழங்கிய செய்தியின் சுருக்கத்தை வழங்குகிறோம். இதனைத் தமிழில் தயாரித்தவர் அருட்திரு எஸ்.எம்.சகாயம், தூத்துக்குடி மறைமாவட்டம்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.