2010-01-02 15:19:43

இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே ஒப்புரவை ஏற்படுத்துவதற்கு அமலமரி தியாகிகள் சபை எடுத்து வரும் முயற்சிகளை இரட்டிப்பாக்கப்பட அழைப்பு


சன.02,2010 இலங்கையில் இடம் பெற்ற கசப்புநிறைந்த போருக்குப் பின்னர், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே ஒப்புரவை ஏற்படுத்துவதற்கு அமலமரி தியாகிகள் துறவு சபை எடுத்து வரும் முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார் அச்சபையின் அதிபர் அருள்தந்தை வில்ஹெல்ம் ஸ்டெக்லிங்.

கண்டி மறைமாவட்டத்தில் இச்சபையின் குருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டதன் பொன்விழாக் கொண்டாட்டத்திற்காக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட போது இவ்வாறு அழைப்புவிடுத்தார் அருள்தந்தை ஸ்டெக்லிங்.

புலம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவுவதற்குப் புதிய திட்டங்களை வகுக்குமாறு வலியுறுத்திய அவர், உள்நாட்டுப் போரினால் காயமடைந்துள்ள மக்களின் புண்களைக் குணப்படுத்தவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவுமான பணிகளில் அமலமரி தியாகிகள் எடுத்துக்காட்டுகளாய் விளங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

தற்சமயம் இலங்கையில் அமலமரி தியாகிகள் துறவு சபையின் ஏறத்தாழ முன்னூறு குருக்களும் அருட்சகோதரர்களும், அகதிகள், விதவைகள், அனாதைகள் போன்றோரைப் பராமரிப்பது உட்பட பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.