2010-01-02 15:22:26

2010- சர்வதேச பல்லுயிரினங்கள் ஆண்டு


சன.02,2010 மனிதர்களின் செயல்களால் உலகிலுள்ள உயிரினங்கள் அவை இயற்கையாக பலுகுவதைவிட ஆயிரம் மடங்கு அழிக்கப்படுவதாகச் சில வல்லுனர்கள் கூறும் வேளை, இந்த உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஐ.நா.நிறுவனம் 2010ம் ஆண்டை சர்வதேச பல்லுயிரினங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது.

இப்பூமியில் வாழ்வு ஆதரவு அமைப்பைப் பாதுகாப்பதற்கென சில முக்கிய நிகழ்வுகளையும் இவ்வாண்டையொட்டி நடத்தத் திட்டமிட்டுள்ளது ஐ.நா.நிறுவனம்.

நாம் இவ்வுலகில் வாழ்வதற்குத் தேவையான சுகாதாரம், செல்வம், உணவு, எரிபொருள் மற்றும்பல முக்கிய பணிகளையும் இந்த உயிரினங்கள் செய்து வருகின்றன.

இந்த உயிரினங்கள் அழிந்தால் இப்பூமியின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று, இத்தகைய சர்வதேச ஆண்டு அறிவிக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தைக் கூறினார் ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டத்தின் முன்னாள் இயக்குனர் Klaus Töpfer

பல்லுயிரினம் என்பது வாழ்வு, இது நமது வாழ்வு எனும் தலைப்பில் இந்த சர்வதேச ஆண்டு அதிகாரப்பூர்வமாக இம்மாதம் 11ம் தேதி பெர்லினில் தொடங்கப்படுகிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் இவ்வாண்டில் பல முக்கிய நிகழ்வுகள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.