2010-01-02 15:17:35

2009ம் ஆண்டில் 37 மறைப்பணியாளர்கள் கொல்லப்பட்டனர்


சன.02,2010 அமெரிக்கக் கண்டங்களில் கத்தோலிக்கத் திருச்சபையின் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதையடுத்து, 2009ம் ஆண்டில் கொல்லப்பட்ட மறைப்பணியாளர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டைவிட ஏறத்தாழ இருமடங்காகி இருப்பதாக வத்திக்கானின் Fides செய்தி நிறுவனம் அறிவித்தது.

2008ம் ஆண்டில் இருபது மறைப்பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்க, 2009ம் ஆண்டில் 37 பேர் கொல்லப்பட்டனர் என்றும், கடந்த பத்து ஆண்டுகளில் இவ்வெண்ணிக்கை அதிகம் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் கூறியது.

2009ம் ஆண்டில் கொல்லப்பட்ட மறைப்பணியாளர்களில் முப்பது பேர் குருக்கள், இரண்டு பேர் அருட்சகோதரிகள் இரண்டு பேர் குருத்துவ மாணவர்கள் மற்றும் மூன்று பேர் பொதுநிலை தன்னார்வப் பணியாளர்கள்.

இவர்களில் 23 பேர் வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களிலும் ஒருவர் இந்தியாவிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் பெரும்பான்மையான கொலைகளுக்கு திருட்டே காரணம் என்று வத்திக்கானின் Fides செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.