உலக வெப்பநிலை மாநாட்டின் உடன்பாடுகள் பலவீனமானதாகவும், அறநெறிப்படி கண்டிக்கத் தக்கதாகவும்
இருக்கின்றன - சர்வதேச காரித்தாஸ்
டிச.19,2009 கோபன்ஹாகன் உலக வெப்பநிலை மாநாட்டின் உடன்பாடுகள் பலவீனமானதாகவும், அறநெறிப்படி கண்டிக்கத்
தக்கதாகவும் இருக்கின்றன என்று சர்வதேச காரித்தாஸ் குறை கூறியது.
இவ்வெள்ளியன்று கோப்பன்ஹாகனில்
நடந்து முடிந்த இருவார உலக மாநாடு குறித்து கருத்து தெரிவித்த CIDSE மற்றும் கத்தோலிக்க காரித்தாஸ்
பிறரன்பு அமைப்புகள், இம்மாநாட்டின் உடன்பாடுகள், உலகின் இலட்சக்கணக்கான வரியா மக்களின் இடர்களை
ஒதுக்குவதாய் இருக்கின்றன என்று கூறின.
வளரும் நாடுகளிலுள்ள மக்கள், வெப்பநிலை
மாற்றத்தின் பாதிப்புகளை ஏற்கனவே அனுபவித்து வரும் வேளை, இந்த ஒப்பந்தம், இம்மக்களின் துயர்களைத் துடைக்க
உதவவில்லை என இவ்வமைப்புகள் தெரிவித்தன.
100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஒரே அரங்கில் கூடி விவாதித்தும்,
உலகளாவிய பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் போதுமான அளவு தங்களை அர்ப்பணிப்பதற்குத் தவறியுள்ளனர்
என்று CIDSE அமைப்பின் பொதுச் செயலர் Bernd Nilles கூறினார்