2009-12-19 16:58:25

இத்தாலி நாட்டை தொற்றியுள்ள அரசியல் காழ்ப்புணர்வு சூழலை அகற்ற வேண்டும் - கர்தினால் அஞ்சேலோ பஞாஸ்கோ


டிச.19,2009 இத்தாலி நாட்டை தற்போது தொற்றியுள்ள அரசியல் காழ்ப்புணர்வு சூழலை அகற்றுவதற்கு சட்ட அமைப்பாளர்கள் முன்வருமாறு கேட்டுள்ளார், இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் அஞ்சேலோ பஞாஸ்கோ. (Angelo Bagnasco )

பல அரசு அஹ்டிகாரிகள் கலந்து கொண்ட திருப்பலியில் இவ்வாறு அழைப்பு விடுத்த கர்தினால் பஞாஸ்கோ, க்ரிச்துமசானது ஒருவரை ஒருவர் மதிப்பதற்கு வலியுறுத்துகின்றது என்று கூறினார்.

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மிலான் நகரில் தாக்கப்பட்டுள்ள சூழலில், ஒருவரின் சொந்த வெறுப்புணர்வானது, அரசியலை நச்சுப்படுத்துகின்றது, கோபத்தை வளர்க்கிறது மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கடும் வன்முறைகளை உண்டுபண்ணுகிறது என்றும் கர்தினால் கூறினார்.

இத்தாலிய குடிமக்கள் தங்கள் தலைவர்களிடமிருந்து நல்லவற்றை எதிபார்க்கிறார்கள் என்றுரைத்த கர்தினால், நேர்மையும் தெளிவும் இல்லாத மாற்றங்களால் பாதுகாப்பின்மை வளர்கின்றது, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைகின்றது என்றும் தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.