2009-12-18 16:13:24

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவிக்கு காரித்தாஸ் விண்ணப்பம்


டிச.18,2009 இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு கத்தோலிக்க காரித்தாஸ் நிதியுதவிகளைக் கோரியுள்ளது.

முகாம்களில் இருந்து வெளியேறும் மக்களின் வீடுகள், போரினால் சேதமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு 32 இலட்சத்து 236 ஆயிரத்து 381 டாலர்கள் தேவைப்படுகின்றது என காரித்தாஸ் கூறியுள்ளது.

மேலும், இடம்பெயர்ந்து மீள்குடியமரும் மக்களுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர கொட்டகைகளை அமைத்துக் கொடுப்பதற்கும், நீர் மற்றும் உணவுத் தேவைகளுக்கும் நிதியுதவி தேவை எனவும் கரித்தாஸ் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதிக்கும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமென 18 கோடியே 20 இலட்சம் டாலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கி இவ்வியாழனன்று இசைவு தெரிவித்துள்ளது.

இன்னும், இதே தேவைக்காக ஏழு கோடியே எழுபது இலட்சம் டாலர்களும், கிழக்கு, வடக்கு மற்றும் தென் உவா மாநிலங்களின் சாலை அபிவிருத்திக்கென 10 கோடியே 50 இலட்சம் டாலர்களும் வழங்குவதற்கு அமெரிக்க ஐக்கிய நாடும் ஒப்புதல் அளித்துள்ளது என ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.