2009-12-17 14:46:59

திருவருகைகாலச் சிந்தனை


திருவருகைகாலச் சிந்தனை - தயாரித்தவர் அருள்தந்தை இம்மானுவேல் சே.ச
வாசிப்பவர் அருள்தந்தை பெர்னார்டின் ம.ஊ.ச
RealAudioMP3 எடுத்துக்காட்டாய் வாழ்வது
திருமுழுக்கு யோவானை மட்டும் ஏன் மனிதருள் பிறந்தவர்களுள் மிகப் பெரியவர் என விவிலியம் சுட்டிக் காட்டுகிறது? இதற்குக் காரணம் அவர் வாழ்ந்த வாழ்வு ஓர் எடுத்துக்காட்டான வாழ்வு. இயேசுவுக்கே திருமுழுக்கு யோவான் ஓர் எடுத்துக்காட்டாய்
என்று சொன்னால் அது மிகையாகாது. அவரது வாழ்வு எந்த அளவிற்கு அமைந்தது என்றால் தனது வாழ்வையே இழக்கத் துணியும் அளவுக்கு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தார். இதுவே இயேசுவும் தனது வாழ்வை மனித மீட்புக்காகச் சிலுவையில் கையளிக்கத் தூண்டியது எனலாம். இன்று நம் மத்தியில் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழும் மனிதர்கள் குறைவு எனக் கருதலாம். ஆனால் நமது பார்வையை விசாலப்படுத்தினால் பலர் இன்றும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது தெளிவாகும். இன்று நம் மத்தியில் எத்தனை பேர் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்கின்றனர். இயற்கையைப் பராமரிப்பதில், மனிதாபிமான செயல்களில் ஈடுபடுவதில், உரிமைகளைப் பெறுவதில் நன்மைகள் புரிவதில் எத்தனையோ பேர் எடுத்துக்காட்டாய் வாழ்கின்றனர். நாமும் புனித திருமுழுக்கு யோவானைப் போல பிறருக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்திடுவோம்.







All the contents on this site are copyrighted ©.