2009-12-17 15:12:57

சலேசிய சபையினரால் தைவானில் Boys ' Town ஆரம்பிக்கப்பட்டது


டிச.17,2009 சலேசிய சபையினர் தைவானில் பணிகளை ஆரம்பித்து 150 ஆண்டுகள் நிறைவுறுவதைக் கொண்டாடும் வகையில் அந்த நாட்டில் பல்வேறு இடங்களில் இச்சனிக்கிழமை வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சிறுவர்கள் நகரம் (Boys ' Town) என்றழைக்கப்படும் வசதி ஒன்று கவோசியுங் (Kaohsiung ) மறைமாவட்டத்தில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
தோமினிகன் சபையினரால் 1977 தைவானில் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர்கள் நகரம் (Boys ' Town), 1980 ஆம் ஆண்டு சலேசிய சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த முப்பது ஆண்டுகளாய் இந்த சேவையினால் 2000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்துள்ளனர். தைவானிலிருந்து சலேசிய சபையில் முதல் அங்கத்தினராக சேர்ந்து திருநிலை படுத்தப்பட்ட அருட்தந்தை Francis Wang Chung-ren இந்த சிறுவர்களுக்காக அதிகம் உழைத்து அந்த உழைப்பினால் உடல் நலம் குன்றி கடந்த ஜூலை மாதம் தன் 49வது வயதில் இறையடி சேர்ந்ததை இந்நிகழ்ச்சியின் போது கூடியிருந்தவர்கள் நினைவு கூர்ந்தனர்.







All the contents on this site are copyrighted ©.