2009-12-17 15:13:39

கொபன்ஹாகன் மாநாட்டிற்கு கத்தோலிக்க மற்றும் கிறிஸ்துவ சபைகளின் சார்பில் "அஞ்சாதீர்கள்" என்ற கருத்துடனான கடிதம்


டிச.17,2009 கொபன்ஹாகனில் நடைபெற்று வரும் தட்பவெப்ப நிலைமாற்றம் குறித்த உலக மாநாட்டில் உருவாகியுள்ள பிரச்சனைகளைத் தாண்டி, உலகத் தலைவர்கள் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகின் பல்வேறு கத்தோலிக்க மற்றும் கிறிஸ்துவ சபைகளின் சார்பில் "அஞ்சாதீர்கள்" என்ற கருத்துடனான கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. பேராயர் Desmond Tutu உட்பட பல கத்தோலிக்க, கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கத்தோலிக்க, கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து இம்மாநாடு ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே கடந்த ஒரு மாதமாய் பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளன என செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. இம்மாநாட்டின் முடிவுகளில் ஒன்றாக வளரும் நாடுகள் தட்பவெப்ப நிலைமாற்றம் குறித்த விளைவுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, குறைந்தது ஒவ்வொரு ஆண்டும் 1500 கோடி டாலர்கள் வளர்ந்த நாடுகள் அளிக்க முன்வரவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட வேண்டுமென கத்தோலிக்க, கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் ஒன்றிணைந்து வலியுறுத்தி வந்துள்ளன என்றும் அச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.