2009-12-15 17:00:15

நம்பிக்கை செய்தி : உலகில் அணுஆயுதங்கள் ஒழிக்கப்பட உலக மதங்களின் பாராளுமன்றம் அழைப்பு


டிச.15,2009 உலகில் அணுஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டும், பல்சமய உரையாடலும் தோழமை உணர்வும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று உலக மதங்களின் பாராளுமன்றம் அழைப்பு விடுத்தது.
கோப்பன்ஹாகன் உலக வெப்பநிலை உலக மாநாட்டையொட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பெர்னில் கூடிய சுமார் எண்பது மதங்களின் பிரதிநிதிகள் உலகத் தலைவர்களுக்கு இவ்வழைப்பை முன்வைத்தனர்.
அமைதி, உரையாடல், ஏழ்மைக்கெதிரான போராட்டம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற தலைப்புகளில் விவாதங்களை நடத்திய இச்சமயப் பிரதிநிதிகள், இப்பூமிப்பந்தைப் பாதுகாப்பதில் மதங்களின் பங்கு குறித்தும் விவாதித்தனர்.
வருங்காலத் தலைமுறைகளுக்கு சுத்தமான உலகை விட்டுச் செல்வதில் உலகத் தலைவர்களுக்கு இருக்கும் கடமையையும் பொறுப்பையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
1893ம் ஆண்டில் தொடங்கப்பட்ட “உலக மதங்களின் பாராளுமன்றம்” என்ற அமைப்பு முதல் முறையாக முஸ்லீம் ஒருவரை அதன் தலைவராகத் தற்சமயம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அமைப்பின் கூட்டமானது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. இக்கூட்டத்தில் புத்தமத தலாய்லாமா, ஜிம்மி கார்ட்டர் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.