2009-12-15 17:10:05

இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் மதம் மற்றும் இனம் சார்ந்த வன்முறைகள் அதிகரித்துள்ளன


டிச.15,2009 இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் மதம் மற்றும் இனம் சார்ந்த வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று உள்துறை அமைச்சகத்தின் ராஜாங்க அமைச்சர் Ajay Maken ராஜ்ய சபாவில் அறிவித்துள்ளார்.
சமய மற்றும் இனத் தீவிரவாதம் குறித்து மேல்சபையில் அறிக்கை சமர்ப்பித்த அஜய் மேகன், 2009ம் ஆண்டில் 11 யூனியன் பிரதேசங்களில் எந்த வன்முறைச் சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை எனினும் ஒரு நாளைக்கு இரண்டு தாக்குதல்கள் வீதம் நாட்டில் இடம் பெற்றுள்ளன என்று கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் 3800க்கு அதிகமான தீவிரவாதத் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன, எனினும் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மஹராஷ்டிராவில் 681, மத்திய பிரதேசத்தில் 654, உத்தரபிரதேசத்தில் 613, ஒரிசாவில் 823 என பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
மேலும், ஒரிசாவில் வன்முறைத் தாக்குதல்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டன. சுமார் 300 ஆலயங்கள் அழிக்கப்பட்டன, ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புலம் பெயர்ந்துள்ளனர் எனத் திருச்சபை அதிகாரிகளும் மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.