2009-12-14 16:14:49

பிலிப்பின்ஸில் அவசரகாலச் சட்டத்தை நீக்கியுள்ளது குறித்து ஆயர்கள் மகிழ்ச்சி


டிச.14,2009 பிலிப்பின்ஸ் Maguindanao பகுதியில் அவசரகாலச் சட்டத்தை நீக்கியுள்ளது குறித்து மகிழும் அதேவளை, 57 பேர்களின் கொலைகளில் ஈடுபட்டவர்களை நீதி முன் கொணர வேண்டியதை வலியுறுத்துவதாக அறிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

அவசரகாலச் சட்டத்தைத் தேவையின்றி நீட்டிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்பது மட்டுமல்ல, அவசரகாலச் சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேறியுள்ள நிலையில் அதனை அகற்றுவதே சிறப்பு என எடுத்துரைத்தார் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Nereo Odchimar

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், 57 பேர் கொலை செய்யப்பட்டது பொது மக்களுக்கு எதிரான வன்முறை என்ற வகையில் நீதி மன்றத் தீர்ப்புக்குக் கொணரப்பட வேண்டும் என்றார் ஆயர் பேரவையின் முன்னாள் தலைவர் பேராயர் Angel Lagdameo

தேவையற்ற அவசரகாலச் சட்டத்தை Maguindanao பகுதியிலிருந்து நீக்கியதில் எதிர் கட்சியாளர்கள் மற்றும் பத்திரிகைத் துறையின் பங்களிப்பு முக்கியமானது எனவும் பாராட்டியுள்ளனர் பிலிப்பின்ஸ் ஆயர்கள். 








All the contents on this site are copyrighted ©.