2009-12-10 15:30:55

நம்பிக்கை செய்தி - திருச்சபையில், பெண் துறவு சபைகளில் சேருவோரின் எண்ணிக்கை, உலகிலே இந்தியா முதலிடம்


டிச.10,2009 உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில், பெண் துறவு சபைகளில் சேருவோரின் எண்ணிக்கை, உலகிலே இந்தியா முதலிடத்தை வகிக்கின்றது என்று ஒரு புள்ளி விபரம் அறிவித்தது.
இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் அருட்சகோதரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளை, ஐரோப்பா, அமெரிக்கா, ஓசியானியா ஆகிய பகுதிகளில் இவ்வெண்ணிக்கையில் சரிவு தெரிவதாகவும் இணையதளத்துக்காக புள்ளி விபரக் கணக்கெடுப்பை நடத்திய Jeff Mirus கத்தோலிக்க கலாச்சார அமைப்பு கூறியது.
2002 மற்றும் 2007ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில் 9,398, வியட்நாமில் 2,545, தென் கொரியா மற்றும் பிலிப்பைன்சில் 500 என அருட்சகோதரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அக்கணக்கெடுப்பு அறிவித்தது.
அதேசமயம், மேற்கத்திய நாடுகளில், எடுத்துக்காட்டாக இத்தாலியில் இதே காலக்கட்டத்தில் 11,156, அமெரிக்க ஐக்கிய நாட்டில் 10,454 அருட்சகோதரிகள் குறைந்திருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
உலகில் ஏறத்தாழ ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் அருட்சகோதரிகள் உள்ளனர். அதாவது உலக மக்கள் தொகையில் ஒவ்வொரு ஒன்பதாயிரம் பேருக்கு சுமார் ஓர் அருட்சகோதரி வீதம் உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.