2009-12-09 17:00:30

நம்பிக்கைச் செய்திபுகழ் பெற்ற Philip Lawrence விருதை Hackney நகரின் இளையோர் குழு பெற்றுள்ளது


டிச.09,2009 இங்கிலாந்தின் புகழ் பெற்ற பிரித்தானிய திரை மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (BAFTA) Philip Lawrence விருதை இவ்வாண்டு Hackney நகரின் Fawcett Youth Group என்றழைக்கப்படும் ஒரு இளையோர் குழு பெற்றுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் புனித ஜார்ஜ் பள்ளிக்கு முன் ஒரு மாணவனை வன்முறை கும்பல் ஒன்று தாக்கியபோது அதைத் தடுத்ததால்,   கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் Philip Lawrence என்பவரது நினைவாக வழங்கப்படும் இவ்விருது, இளையோர் தங்கள் சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் எடுக்கும் குறும் படங்களுக்கு வழங்கப்படுகிறது. Hackney நகரில் இளைய சமுதாயம் காவல் துறையினரிடம் சந்திக்கும் பல சவால்களை சித்தரிக்கும் குறும் படத்திற்காக Fawcett Youth Groupக்கு இந்த விருது இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது. தங்கள் சுற்று புறத்தில் உள்ள மக்களை உயர்த்தும் நோக்கத்தில் இவ்விளையோர் Cett4 Docu Drama என்ற பெயருடன் மேற்கொண்ட முயர்ச்சிகளுக்குப் பரிசாக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பெருநகரங்களில் நிலவும் வன்முறை கும்பல், சிறுவயதிலேயே கருத்தரிக்கும் பெண்கள், போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சிறியோரும், இளையோரும், குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இளையோர் என்று இளையோரை மையப்படுத்திய பல பிரச்சனைகளைத் தங்கள் குறும்படங்களின் மூலம் கூறிவருகின்றனர். இளையோர் கையால் கொலையுண்ட தன் கணவர் Philip Lawrence நினைவாக இவ்விருதை நிறுவிய Frances Lawrence, விருது வழங்கும் விழாவில் பேசிய போது, Fawcett Youth Group மனித குலத்தின் மிகச் சிறந்த நன்மைகளை நமக்கு நினைவு படுத்தும் ஒரு குழு என்று இந்த இளையோர் குழுவை பாராட்டினார்.







All the contents on this site are copyrighted ©.