2009-12-07 16:31:39

நம்பிக்கை செய்தி - கத்தோலிக்கர் அனைவரும் இயற்கையைப் பாதுகாப்பது குறித்து தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்


டிச.07,2009 இத்திருவருகை காலத்தின் போது கத்தோலிக்கர் அனைவரும் இயற்கையைப் பாதுகாப்பது குறித்து தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என வியட்நாம் ஆயர் பவுல் புய் வான் டோக் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்திருவருகை காலத்தின் போது மை தோ மறைமாவட்டத்தின் பங்குத்தளங்களில் வாசிக்கப்படும் ஆயரின் செய்தி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள ஆறுகளை மேலும் மாசுகேடடையாமல் காப்பது ஒவ்வொருவரின் கடமையாகிறது என உரைக்கிறது.
சுயநலத்திறாகாக இயற்கை வளங்களை அழிக்கும் போது கடவுளுக்கும் வரும் தலைமுறைகளுக்கும் நாம் பதிலளிக்க வேண்டும் எனவும் ஆயர் டோக் தனது செய்தியில் கூறியுள்ளார்.
வனத்தோடு தொடர்புடைய சட்டவிரோத வியாபாரங்களில் இருந்து கத்தோலிக்கர் ஒதுங்கி இருப்பதன் மூலமும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவ முடியும் என்றார் வியட்நாம் ஆயர்.
வியட்நாம் அரசின் ஆய்வுகளின்படி 2100ம் ஆண்டில் கடல்மட்டம் ஒருமீட்டர் உயரக்கூடும் எனவும், இதனால் வியட்நாமின் நாற்பதாயிரம் சதுர கிலோ மீட்டர் விவசாய நிலங்கள் தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.