பருவநிலை மாற்றத்தால், நெற்பயிரின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படக்கூடும்
05டிச.2009 பருவநிலை மாற்றத்தால், தெற்காசிய மக்களின், அதிலும் குறிப்பாக தமிழர்களின்
முக்கிய உணவு தானியமான நெற்பயிரின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் தற்போதைய நிலையில் சராசரியாக
இரண்டரை முதல் ஐந்து டன் வரை நெல் விளைகிறது. ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக
புவி வெப்படைந்துவருவதால், அடுத்த பத்து ஆண்டுகளில், அதாவது 2020ஆம் ஆண்டுக்குள் தற்போதைய
நெல் விளைச்சலில் பதினைந்து முதல் இருபது விழுக்காடு வரை வீழ்ச்சியடையும் என்று வேளாண்
விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
அதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளும் தற்போது
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
அத்தகைய ஆராய்ச்சியை செய்து வருகிறது என்று கூறப்படுகின்றது.