2009-12-04 16:57:17

பிப்ரவரி 9-11, வேளாங்கன்னியில் இந்திய குருக்கள் மாநாடு


டிச.04,2009 இந்திய மறைமாவட்ட குருக்கள் கழகம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 11 வரை, வேளாங்கன்னியில் இந்திய குருக்கள் மாநாட்டை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் குருக்கள் ஆணையத்தின் ஆதரவுடன் இடம் பெறவுள்ள இம்மாநாடு, குருக்கள், கிறிஸ்துவுக்கான தங்கள் வாழ்வின் அர்ப்பணம் மற்றும் இந்தியாவில் அவர்களின் திருப்பணியை புதுப்பித்து தங்களை மீண்டும் அதில் முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று இதற்கு ஏற்பாடு செய்வோர் கூறினர்.

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தமிழக முதலமைச்சர் எம்.கருணாநிதி, சுவாமி அக்னிவேஷ் Agnivesh போன்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்த குருக்கள் ஆணையத்தின் செயலர் அருள்திரு ஜான் குழந்தை கூறினார்.

ஒவ்வொரு மறைமாவட்டமும் ஐந்து குருக்களையும் ஒரு துறவியையும் அனுப்பலாம் என்வும் இந்தியா முழுவதிலிருமிருந்து சுமார் ஆயிரம் குருக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அக்குரு கூறினார்.

திருப்பீடத்தின் குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் கிளவ்தியோ ஹூயூம்ஸ் உட்பட பல பிரமுகர்கள் இதில் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.