2009-12-04 16:58:09

உலக வர்த்தக அமைப்பு, சமூக நீதிக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதற்குத் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமென்று திருப்பீடம் அழைப்பு


டிச.04,2009 உலக வர்த்தக அமைப்பு, சமூக நீதிக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதற்குத் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுவதாக பேராயர் சில்வானோ தொமாசி (Silvano Tomasi) கூறினார்.

WTO என்ற உலக வர்த்தக அமைப்பு நடத்திய அமைச்சர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்ட சுமார் 139 நாடுகளின் அமைச்சர்களுக்கு உரையாற்றிய பேராயர் தொமாசி, சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் காணப்படும் சமூக அநீதிகள் மற்றும் சீர்கேடுகள் பற்றிக் கோடிட்டுக் காட்டினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏழைகளை அதிகம் பாதித்துள்ளது என்றுரைத்த அவர், உலக அளவில் வணிகத்தைத் தளர்த்துவதில் சர்வதேச அளவில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பேராயர் சில்வானோ தொமாசி, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் ஆவார்.








All the contents on this site are copyrighted ©.