2009-12-03 16:03:31

மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று போபாலில் ஊர்வலம்


டிச.03,2009 மத்திய பிரதேசத்தின், போபாலில் உள்ள Union Carbide தொழிற்சாலையிலிருந்து 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி  இரவிலிருந்து 3ஆம் தேதி காலை வரை வெளியேறிய நச்சு வாயுவினால் பல ஆயிரம் பேர் உயிரிழந்ததையும் அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்றும் வாழ்ந்து வரும் ஆயிரமாயிரம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் இவ்வியாழனன்று போபாலில் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த விபத்து நடந்து 25 ஆண்டுகள் இப்புதனோடு நிறைவுற்றாலும், இன்னும் இந்த விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என இவ்வூர்வலத்திலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டவர்கள் கூறினர். இவ்விபத்து நிகழ்ந்து 25 ஆண்டுகள் முடிந்தாலும், இன்னும் ஆயிரமாயிரம் மக்கள், முக்கியமாக இவ்விபத்திற்குப் பின் பிறந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசும், Union Carbide நிறுவனமும் இன்னும் உணராதது மிகவும் வருந்துதற்குரியதென மனித உரிமைகளுக்கான மக்கள் விழிப்புணர்வுக் குழுவின் தலைவர் லெனின் ரகுவன்ஷி செய்தியாளர்களிடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.