2009-11-30 16:15:42

தட்பவெட்ப நிலை மாற்றங்களின் தீய விளைவுகளை அகற்றுவதற்கு இலண்டனில் கிறிஸ்தவ ஐக்கிய ஜெபவழிபாடு


நவ.30,2009 தட்பவெட்ப நிலை மாற்றங்களின் தீய விளைவுகளை அகற்றுவதற்கு அரசியல் தலைவர்களை வலியுறுத்தும் நோக்கில் இங்கிலாந்து தலைநகரில் கூடி கிறிஸ்தவ ஐக்கிய ஜெபவழிபாடு ஒன்றை நடத்த உள்ளனர் கிறிஸ்தவ சபைகளின் 16 தலைவர்கள்.

ஆங்கிலிக்கன் பேராயர் Rowan Williams, வெஸ்ட்மின்ஸ்டர் கத்தோலிக்கப் பேராயர் Vincent Nichols, மற்றும் Methodist, Baptist, Evangelical கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் உட்பட 16 கிறிஸ்தவ தலைவர்கள் வரும் சனியன்று கலந்து கொள்ளும் இச்செப வழிபாட்டில் ஏறத்தாழ 3000 விசுவாசிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தட்பவெட்ப நிலை மாற்றத்திற்கு மிகச் சிறிய அளவிலேயே காரணமாகும் ஏழைகளே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மனதிற்கொண்டும், படைப்புகள் இறைவனால் மனிதன் வசம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டவை என்பதை அரசியல் தலைவர்களுக்கு நினைவூட்டும் விதமாகவும், தட்பவெட்ப மாற்றம் குறித்த ஐ.நா.வின் Copenhagen கூட்டத்திற்கு முன் இச்செபவழிபாடு நடத்தப்படுவதாக கிறிஸ்தவ சபைகள் அறிவித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.