2009-11-28 15:38:34

நவ. 29 புனித ஹூபர்ட்டின் திருநாள்


அரச மாளிகையில் வாழ்ந்து வந்த ஹுபர்ட், தன் மனைவியை இழந்ததும் துறவு பூண்டார். ஆர்தனேஸ் என்ற காடுகளில் கடும் தவம் புரிந்த பின், குருவாகத் திருநிலை பெற்றார். 718ஆம் ஆண்டில் பெல்ஜியத்தின் லீஜ் நகரின் முதல் ஆயராகப் பொறுப்பேற்றார். அவரது மறையுரைகளால் ஆர்தனேஸ் பகுதியில் அனைவரும் கிறிஸ்துவை ஏற்றனர். எனவே இவரை ஆர்தனேஸின் அப்போஸ்தலர் என்று அழைத்தனர்.







All the contents on this site are copyrighted ©.