2009-11-26 15:39:34

பிலிப்பின்ஸ் நாட்டின் கத்தோலிக்க இளைஞர் CNN நிறுவனத்தின் "Hero of the Year "


நவ.26,2009 28 வயது நிரம்பிய எப்ரேன் பெனப்லோரிடா (Efren Penaflorida ) CNN நிறுவனத்தின் இவ்வாண்டின் நாயகன் "Hero of the Year " விருதைப் பெற்றுள்ளார். டாக்சி ஓட்டுனரின் மகனாகப் பிறந்த எப்ரேன், தன் 16வது வயதில் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதில் அதிக ஈடுபாடு காட்டினார். Dynamic Teen என்ற பெயரில் அவர் ஆரம்பித்த இந்த நிறுவனத்தில் பல இளையோரைக் கூட்டாகச் சேர்த்து, ஆயிரக்கணக்கானக் ஏழைக் குழந்தைகளுக்குத் தினமும் கல்வி புகட்டி வருகிறார். தற்போது பிலிப்பின்சில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் மாநாட்டில், எப்ரேன் சிறப்பான முறையில் கவுரவிக்கப் பட்டார். ஏழைக் குழந்தைகளின் வாழ்வில் கல்வி மூலம் எப்ரேன் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் உலகின் பல இளையோருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறதென ஆசிய ஆயர் பேரவையின் இளையோர் பணிக் குழுவின் தலைவர் ஆயர் ஜோயல் பேலன் (Joel Baylon) கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.