2009-11-26 14:28:44

நவம்பர் 27 அன்று வரலாற்றில் நிகழ்ந்தவை


1095 – திருத்தந்தை இரண்டாம் உர்பான், கிளேர்மோண்ட் சங்கத்தில் முதல் சிலுவைப்போரை அறிவித்தார்.

1830 –உலக உருண்டை மீது கன்னிமரியா நின்று கொண்டு, காலடியில் சாத்தானை நசுக்குவதையும், கன்னிமரியாவின் கரங்களிலிருந்து ஒளிக்கதிர்கள் வருவதையும் காட்சியில் கண்டாள் புனித கத்தரீன் லபோர்.

1895 – விஞ்ஞானி ஆல்பிரட் நொபெல் என்பவர், நொபெல் பரிசை உருவாக்குவதற்கெனத் தனது சொத்துக்களை மூலதனமாக வைக்கும் மரண உயிலில் பாரிசிலுள்ள சுவீடன்-நார்வே அமைப்பில் கையெழுத்திட்டார். பின்னர் அவர் இறந்தார்.

1989 - ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.

2004 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், புனித ஜான் கதிரிஸோஸ்தமின் திருப்பண்டங்களை, கீழைரீதி ஆர்த்தோடாக்ஸ் சபைக்கு வழங்கினார்.

2005 – மனித முகத்தின் ஒருபகுதி முதல் முறையாக பிரான்சின் Amiens ல் மாற்று அறுவை சிகிச்சை முறையில் செய்யப்பட்டது.

2008 – இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி. பி. சிங் இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.