2009-11-25 16:10:59

திருத்தந்தையின் புதன் போது மறைபோதகம்


திருத்தந்தையின் இப்புதன் போது மறைபோதகம் 6ஆம் சின்னப்பர் அரங்கிலே இடம் பெற்றது.

மத்திய காலத்தின் கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்த நம் மறைபோதகத்தில் தற்போது, பாரீசின் புனித விக்டர் துறவு இல்லத்தோடு தொடர்புடைய 12ஆம் நூற்றாண்டின் முக்கிய இரு இறையியலார்கள் குறித்து நோக்குவோம் எனத் தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை 16ஆம் பெனெடிக்ட். RealAudioMP3

கடவுளின் மீட்புத் திட்டத்தைப் புரிந்துகொள்வதில் பகுத்தறிவையும், விசுவாசத்தையும் இணைக்க முயலும் இறையியலின் அடிப்படையாக, விவிலியத்தின் வார்த்தைகளின் அடிப்படையில் அல்லது வரலாற்றின் அடிப்படையில் காணப்படும் பொருள் விளக்கம் கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் புனித விக்டர் துறவு மடத்தின் Hugh. கிறிஸ்தவ விசுவாசத்தின் அருள் அடையாளங்கள் பற்றிய இவரின் ஆழ்ந்த கருத்துக்கள், அருளடையாளம் குறித்த மிக உயரிய விளக்கத்தை வழங்கின. இது, அருளடையாளங்கள் கிறிஸ்துவில் நிறுவப்பட்டவை மற்றும் அருளை வழங்குபவை என்பதை மட்டும் வலியுறுத்தவில்லை, மாறாக, அருளடையாளம் என்பதன் ஒரு வெளிப்படையான, வெளியில் தெரியும்படியான மதிப்பீட்டையும் வலியுறுத்தியது. இதே Hughன் சீடரான புனித விக்டர் துறவு இல்லத்தின் Richard என்ற இறையியலாளர், மனிதனின் முயற்ச்சிக்கும் ஆன்மீக ஞானத்திற்கும் உதவும் வகையிலான ஆன்மீகக் கல்வி கற்பு முறையாக விவிலியத்தின் தொடர் உருவகமான பொருள் விளக்கத்தை வலியுறுத்தினார். இருவரிடையே, கொடுப்பதிலும், பெறுவதிலும் துவங்கி, மூன்றாம் மனிதருக்குக் கொடையாக வழங்குவதில் தன் முழுமையைக் காணும் அன்பெனும் மறையுண்மையை அலசி ஆராய்வதின் வழி மூவொரு கடவுள் என்ற மறையுண்மையைப் புரிந்து கொள்வது குறித்து மூவொரு இறை குறித்த Richardன் எழுத்துக்கள் விளக்கின. இறையியல் என்பது விசுவாசத்தின் ஆன்மீகச் சிந்தனையில் நன்கு நிலை நாட்டப்பட்டது, புரிந்து கொள்ளுதலை நோக்கித் தேடி ஓடுவது, தூய திருத்துவத்தின் முடிவற்ற அன்பை அனுபவிப்பதில் அளவிட முடியா மகிழ்வைக் கொணர்வது என்பதைப் புனித விக்டர் துறவு இல்லத்தின் இம்மிகப்பெரும் இறையியலாளர்களான Hughம் Richardம் நமக்கு உணர்த்துகின்றனர். RealAudioMP3
இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.