2009-11-25 15:03:42

ஆசிய இளையோர் மாநாடு பிலிப்பின்ஸ் நாட்டில் ஆரம்பமானது 


நவ.25,2009 நவம்பர் 23ஆம் தேதி ஆரம்பமான ஆசிய இளையோர் மாநாடு இம்மாதம் இறுதிவரை பிலிப்பின்ஸ் நாட்டில் இமுஸ் என்ற மறைமாவட்டத்தில் நடைபெறுகிறது. கத்தோலிக்க இளையோர் இன்னும் அதிக ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் உழைக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் இம்மாநாட்டில் பங்களாதேஷ், ப்ருனே, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, இன்னும் ஆசியாவின் அனைத்து நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். மணிலாவின் பேராயர் கர்தினால் கவுதேன்சியோ ரோசாலஸ் (Gaudencio Rosales), கோலா லம்பூர் பேராயர் மர்பி பாக்கியம் (Murphy Pakiam) ஆகியோருடன் இன்னும் 25 ஆயர்கள், 200 குருக்கள் கலந்து  கொண்ட திருப்பலியுடன் இந்த மாநாடு ஆரம்பமானது. ஐந்தாவது முறையாகக் கொண்டாடப்படும் இந்த ஆசிய இளையோர் மாநாட்டை இமுஸ் மறை மாவட்ட ஆயர் லூயிஸ் அந்தோனியோ டாக்லே (Luis Antonio Tagle) துவக்கி வைத்தார்.







All the contents on this site are copyrighted ©.